கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது - சென்னை குடிநீர் வாரியம் தகவல்

" alt="" aria-hidden="true" />


 


சென்னை:


சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் வருகிற கோடை காலத்தை சமாளிக்க கூடிய அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.


மேலும் ஆந்திரா மாநிலம் 1000 மில்லியன் கன அடி தண்ணீரை கூடுதலாக திறந்து விடுவதால் அடுத்த 6 மாதத்துக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தற்போது சென்னைக்கு கடல் நீர் குடிநீர் திட்டம், வீராணம் ஏரி போன்றவை கை கொடுத்து வருகிறது. 4 ஏரிகளில் இருந்தும் தினமும் தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது.


சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள்  கூறியதாவது:-


சென்னை நகரின் குடிநீர் தேவையை கோடையில் சமாளிக்க போதுமான தண்ணீர் உள்ளது. மேலும் ஆந்திர அரசிடம் தெலுங்கு கங்கா திட்டத்தின் கீழ் 8 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது.


அதனை ஏற்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 700 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.


கடந்த ஆண்டு பருவமழை ஆந்திர பகுதியில் நன்கு பெய்ததால் சோமசீலா, ஸ்ரீசைலம், கண்டலேறு அணைகள் நிரம்பி உள்ளன.


அவர்களது சொந்த தேவை பாதிக்கப்படாத சூழ்நிலையில் 54 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து தற்போது 350 முதல் 400 மில்லியன் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.


நேற்று 350 மில்லியன் கன அடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. இதனால் கோடையில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை.


ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் இன்னும் நீர் வரத்து அதிகரித்து 4 ஏரிகளிலும் நீர் மட்டம் உயரும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


Popular posts
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் கை சுத்திகரிப்பானை ( Hand Sanitizer) வழங்கினார்
Image
கொரோனா பாதிப்பு - இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பு மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Image
பிரதமர் மோடியின் கரங்களில் இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது - ஜோதிராதித்ய சிந்தியா
Image
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி வண்ணாங் குளத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு
Image
மத்திய மந்திரி ஆகிறார் ஜோதிராதித்ய சிந்தியா - பாஜகவில் இணைந்தார்
Image