மத்திய மந்திரி ஆகிறார் ஜோதிராதித்ய சிந்தியா - பாஜகவில் இணைந்தார்

" alt="" aria-hidden="true" />


புதுடெல்லி:

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல் மந்திரி கமல் நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா இடையே பனிப்போர் நீடித்து, தற்போது ஆட்சியை கவிழ்க்கும் வகையில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.


இதற்கிடையே, ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 21 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 22 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து அம்மாநில சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினர்.


ஆளும்கட்சியை சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக விலகியதால் அங்கு கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா, அசோகா சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் ஜோதிராதித்ய சிந்தியா தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்


Popular posts
பிரதமர் மோடியின் கரங்களில் இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது - ஜோதிராதித்ய சிந்தியா
Image
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி வண்ணாங் குளத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு
Image
கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது - சென்னை குடிநீர் வாரியம் தகவல்
Image
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் கை சுத்திகரிப்பானை ( Hand Sanitizer) வழங்கினார்
Image
கொரோனா பாதிப்பு - இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பு மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Image