வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்* *முதன்மைக்கல்வி அலுவலர் சா.மார்ஸ் தலைமையில்*
" alt="" aria-hidden="true" />

*தற்காலிக காய்கறி சந்தையில் சமூக இடைவெளி பின்பற்ற பொதுமக்களுக்கு கொரோனா நோய்* *தடுப்பு விழிப்புணர்வு*

 

வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தைகளுக்கும் வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சா.மார்ஸ் தலைமையில் ஜுனியர் ரெட்கிராஸ், சாரண சாண்ணீயம், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஆசிரியர்கள் பொதுமக்களை சமூக இடைவெளி விட்டு வருகை தரவும் காய்கறிகளை வாங்கவும் அதே மாதிரி வெளியே செல்லவும் நெறிப்படுத்த உதவினர்

01.04.2020 இன்று ஒவ்வொரு சந்தையிலும் ஜுனியர் ரெட்கிராஸ், பாரத சாரண சாரணீய, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் 10பேர் வீதம் வேலூர், காட்பாடி, குடியாத்தம் பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் இயங்கும் 13 சந்தைகளில் பொதுமக்களை சமூக இடைவெளி விட்டு வருகை தரவும் காய்கறிகளை வாங்கவும் அதே மாதிரி வெளியே செல்லவும் நெறிப்படுத்த உதவினர்.  

இதன் ஒரு பகுதியாக காட்பாடி டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வரும் காய்கறி விற்பனை மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் பார்வையிட்டார். உடன் காட்பாடி துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் ஆய்வாளர் புகழ் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ் தலைமையாசிரியர் எம்.மோகன் ஜூனியர் ரெட் கிராஸ் கல்வி மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் பாரத சாரண சாரணிய நிர்வாகி எஸ்.எஸ்.சிவவடிவு செயலாளர் எ.சிவக்குமார், ஆசிரியர்கள் தரணிபாபு, பி.இளங்கோ, சாரணீய ஆலோசகர் அருள்ஜோதி, மாவட்ட இணை அமைப்பு ஆணையர் சசிரேகா, பிரியதர்ஷினி உள்ளிட்ட 10 பேர் பொதுமக்களை சமூக இடைவெளி விட்டு வருகை தரவும் காய்கறிகளை வாங்கவும் அதே மாதிரி வெளியே செல்லவும் நெறிப்படுத்த உதவினர்.

பாகாயம் சிஎம்சி மருத்துவ கல்லூரி எதிரில் உள்ள தற்காலிக காய்கறி மையத்தில் மாவட்ட அமைப்பு இணை ஆணையர் பி.குமார், ஜி.டி.பாபு, அயூப், ஞானகுரு, சந்திரசேகரன், ஜெயசந்திரன்,, பாஸ்கர், உள்ளிட்ட 10பேர் சாரண, ஜுனியர் ரெட்கிராஸ் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்யில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மையத்தில் முதுகலை ஆசிரியர் எஸ்.ராஜேஸ்குமார், மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி மையத்தில் பாரத சாரண சாரணீய மாவட்ட செயலாளர் எ.சிவக்குமார், மாவட்ட அமைப்பு ஆயைணர் ஜெ.பாபு, பார்த்தீபன், சாந்தகுமார், சாரணீய அமைப்பு ஆணையர் மகேஸ்வரி,  முஸ்லீம் மேனிலைப்பள்ளி, மாவட்ட பயிற்சி ஆணையர் டேவிட், சர்மிளா, சத்துவாச்சாரி பள்யில் உள்ள மையத்தில் முதுகலை ஆசிரியர் ஆர்.எஸ்.அஜீஸ்குமார், தமிழாசிரியர் வா.ராமூர்த்தி, தலைமையாசிரியர் சினேகலதா, எ.செல்வம், பட்டதாரி ஆசிரியர் ஆர்.சந்தானம், உடற்கல்வி ஆசிரியர் தினேஷ், உள்ட்டோரும் குடியாத்தம், பேர்ணாம்பட்டு பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி மையத்தில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பாளர் சண்முகசீனிவாசன், மாவட்ட சாரண சாரணீய செயலாளர் ஜி.பாபு, சாந்தி, சாரணீய மாவட்ட பயிற்சி ஆணையர் லெனின் லில்லிகுமாரி, பள்ளிகொண்டா மகளிர், சரவணன் உள்பட 150 ஆசிரியர் ஆசிரியைகள் கொரோன நோய் தடுப்பு விழிப்புணர்வு பணியினை மேற்கொண்டனர்

Popular posts
பிரதமர் மோடியின் கரங்களில் இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது - ஜோதிராதித்ய சிந்தியா
Image
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி வண்ணாங் குளத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு
Image
கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது - சென்னை குடிநீர் வாரியம் தகவல்
Image
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் கை சுத்திகரிப்பானை ( Hand Sanitizer) வழங்கினார்
Image
கொரோனா பாதிப்பு - இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பு மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Image